குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 013

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியிடம் தலைவி தன்னுடைய ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.

மாசுஅறக் கழீஇய யானை போலப்,
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்த, நம் குவளை அம் கண்ணே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

தோழி! பெருமழை பொழிந்ததால் மாசு நீங்கிய ஈரமான சொரசொரப்பான கரிய பாறைக் கல்லானது, புழுதி நீங்கி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போலக் காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன். அவன் தான் நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான். அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய அழகிய கண்களில் பசலை படர்ந்தன.

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசு நீங்கப் பெற்ற நாடன் இவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தனன் என்பது. பாறையும் யானையும்: அகநானூறு 57 - இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 - பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 - பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 - மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 - துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 - கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 - மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 - பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 - புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம். இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - ஏதந்தராத துறுகல் ஏதந்தரும் யானை எனக் காண்பார் வருந்தத் தாங்கும் நாடன் என்றதனானே, இனிமை தருங் கூட்டமும் பிரிந்திடுவானோ என்ற கவற்சியால் இனிமை பயவாதிருக்கும்படி ஒழுகினான் என்பதாம். ஆர்ந்த (5) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பசலை நிறம் கொண்டன, உ. வே. சாமிநாதையர் உரை - பசலை நிறம் நிரம்பப் பெற்றன, தமிழண்ணல் உரை - முழுவதும் பசலை நிறம் ஆகிப்போயின. ஏகாரங்கள் - அசை நிலைகள்.

சொற்பொருள்:

மாசு அற - புழுதி இல்லாமல், கழீஇய - கழுவப்பட்ட (சொல்லிசை அளபெடை), யானை போல - யானையைப் போல, பெரும் பெயல் - பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர் - கரிய சொரசொரப்பான, கரிய சருச்சரையை உடைய, துறுகல் - பாறை, பைதல் - பசுமையான, ஈரமான, ஒருதலை - ஒரு பக்கம், சேக்கும் - கூடும், நாடன் - தலைவன், நோய் தந்தனனே- நோய் தந்து விட்டனனே, பசலை ஆர்ந்த - பசலை படர்ந்த, நம் குவளை - என்னுடைய குவளை மலர் போன்ற, அம் கண்ணே- அழகிய கண்களில்