குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 386

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றவேண்டுமென்று வற்புறுத்திய தோழியை நோக்கி, “மாலைக்காலத்தில் காமநோய் மிகுவதனால் துன்புறுகின்றேன்” என்று தலைவி கூறியது.

வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையே அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணோடு . . . . [05]

புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.
- வெள்ளிவீதியார்.

பொருளுரை:

தோழி! வெள்ளிய மணல் பரவிய மலர்கள் செறிந்த சோலையையுடைய தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன் என்னைப் பிரியாத முன்காலத்தில் யான்! தூய அணிகலன்களை யணிந்த மகளிர் விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; இனி அது கழிந்தது! அம்மாலைக் காலம் பூமி பரந்தது போன்ற பெரிய துன்பத்தோடு தனிமையை உடையதாதலை அப்பொழுது அறியேன்.

முடிபு:

துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.

கருத்து:

தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.