குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 145

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு உறைபதி யன்று” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.

உறைபதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே . . . . [05]
- கொல்லனழிசியார்.

பொருளுரை:

கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர் கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுயாமத்தில் துயிலாமல் தங்குவாரை ஏனென்று வினாவாத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு நெடிய இரவை உடையது ஆதலின் இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.

முடிபு:

இச்சிறுகுடி துயிற்கண் மாக்களொடு நெட்டிராவுடைத்து; உறைபதியன்று.

கருத்து:

தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.