குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 387

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “மாலைக்காலமும் யாமமும் எனக்குத் துன்பத்தைத் தருவனவாயின” என்று தலைவி கூறியது.

எல்லை கழிய, முல்லை மலர்,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி? - தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! . . . . [05]
- கங்குல் வெள்ளத்தார்.

பொருளுரை:

தோழி! பகல் நீங்க முல்லைக்கொடிகள் மலர சூரியனது வெப்பம் குறைந்த செயலறுதற்குரிய மாலைக்காலத்தையும் இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வருமட்டும் கடந்தோமாயின் அதன்மேல் வரும் அவ்விரவின் மிகுதி கடலைக்காட்டிலும் பெரியது; நாம் மாலையை நீந்துவதால் வரும் பயன்யாது?.

முடிபு:

தோழி, மாலையும் நீந்தினமாயின் கங்குல் வெள்ளம் பெரிது; எவன்கொல்?.

கருத்து:

மாலையும் யாமமும் தலைவரது பிரிவை நினைவுறுத்தித் துன்பம் செய்வனவாம்.