குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 196

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புக்க தலைவனுக்குத் தோழி கூறியது. தனது பரத்தமையாலே ஊடியிருந்த தலைவியின் ஊடல் தீர்த்து உடம்படச் செய்யும்படித் தோழியை வேண்டிய தலைவனுக்கு அவள் கூறியது.

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்! இனியே,
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர் . . . . [05]

ஐய! அற்றால் அன்பின் பாலே!
- மிளைக் கந்தனார்.

பொருளுரை:

ஐயா! முன்பு என் தோழி உங்களிடம் பச்சை வேப்பங்காயைக் கொடுத்தால், அதை இனிய வெல்லக்கட்டி என்று கூறுவீர்கள். இப்பொழுது அவள் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச்சியான சுனையின் தெளிந்த தை மாதத்து நீரைத் தந்தால் கூட, “அது சூடாக உள்ளது, உவர்ப்பாக உள்ளது” என்று கூறுகின்றீர்கள். உங்கள் அன்பு இவ்வாறு உள்ளது.

குறிப்பு:

தரினே - ஏகாரம் அசை நிலை, இனியே: ஏகாரம் அசை நிலை, அற்றால்: ஆல் அசை நிலை, பாலே: ஏகாரம் அசை நிலை. பறம்பு மலையின் சுனை: அகநானூறு 78 - கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 - பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 - வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 - தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 - பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 - பாரி பறம்பின் பனிச் சுனை.

சொற்பொருள்:

வேம்பின் பைங்காய் - வேப்ப மரத்தின் பச்சைக்காய், என் தோழி தரினே - என் தோழி உன்னிடம் தந்தால், தேம்பூங்கட்டி என்றனிர் - இனிய வெல்லக்கட்டி என்று கூறினீர், இனியே - இப்பொழுது, பாரி பறம்பில் - பாரியின் பறம்பு மலையின், பனிச்சுனை - குளிர்ந்த சுனையின், தெண்ணீர் - தெளிவான நீர், தைஇத் திங்கள் தண்ணிய - தை மாதத்திற்கு உரிய குளிர்ச்சியான, தரினும் - தந்தாலும், வெய்ய - வெட்பமாக, உவர்க்கும் என்றனிர் - உவர்க்கும் என்றுக் கூறுகின்றீர், ஐய - ஐயா, அற்றால் அன்பின் பாலே - இவ்வாறு உள்ளது உன்னுடைய அன்பின் தன்மை