குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 263

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.

மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
'பேஎய்க் கொளீஇயள் இவள்' எனப்படுதல் . . . . [05]

நோதக்கன்றே - தோழி! - மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.
- பெருஞ்சாத்தனார்.

பொருளுரை:

தோழி! பெரிய மலையினிடத்து மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவன் மாட்டு தவறிலேமாகிய நாம் இக் களவொழுக்கத்திலே நிகழா நிற்ப ஆட்டின் கழுத்தை அறுத்து தினையை உடைய பிரப்பை வைத்து ஓடுகின்ற ஆற்றுத் துருத்தியிலே பலவகையான இசைக் கருவிகள் ஒலிப்ப தாம் வெளிப்படுதலை அன்றி நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத வேறாகிய பெரிய தெய்வங்கள் பலவற்றை ஒருங்கு வாழ்த்தி இவள் பேயால் கொள்ளப் பட்டாள் என்று கூறப்படுவ வருந்துதற்கு உரியதாகும்.

முடிபு:

தோழி, நாம் இதற்பட, அறுத்து இரீஇ வாழ்த்தி எனப்படுதல் நோதக்கன்று.

கருத்து:

தாய் வெறியாடக் கருதினாள்; அதனை நாம் தடுக்க வேண்டும்.