குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 092

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்ததால் பெரிதும் வருந்தியிருந்த தலைவி பொழுது கண்டு சொன்னது.

ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
அளிய தாமே கொடு சிறை பறைவை
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே . . . . [05]
- தாமோதரனார்.

பொருளுரை:

சூரியன் மறைந்த அகன்ற வானத்தில் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள் உணவை அலகில் தூக்கிக் கொண்டு, வழி அருகில் உள்ள உயர்ந்த கடம்ப மரத்தில் உள்ள தங்கள் கூடுகளுக்குச் சென்று, குஞ்சுகளின் வாயின் உள்ளே திணிக்கும். அவை இரங்கத்தக்கன.

குறிப்பு:

தாம், ஏ, ஆல் - அசை நிலைகள். பொ. வே. சோமசுந்தரனார் உரை - அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரக்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இறங்கியவாறாம். தமிழண்ணல் உரை - இறைச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டான பாட்டு இது.

சொற்பொருள்:

ஞாயிறு பட்ட - சூரியன் மறைத்த, அகல்வாய் வானத்து - அகன்ற வானத்தில், அளிய தாமே - அவை இரங்கத்தக்கன, கொடும் - வளைந்த, சிறை - இறகு, பறவை - பறவைகள், இறை - உயர்ந்த, உறை - வாழும், ஓங்கிய - உயர்ந்த, நெறி - வழி, அயல் - அருகில், மராஅத்த - கடம்ப மரங்கள் (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), பிள்ளை - குஞ்சுகள், உள்வாய் - வாய்க்கு உள்ளே, செரீஇய - சொருகும் (சொல்லிசை அளபெடை), இரை கொண்டமையின் - உணவைக் கொண்டமையால், விரையுமால் செலவே - விரைவாகச் செல்லும் (விரையும் + ஆல், ஆல் அசைநிலை)