குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 237

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அதனை ஈட்டிக் கொண்டு வருகையில், தேர்ப்பாகனை நோக்கி கூறியது.

அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇய,
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின், அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு . . . . [05]

கோள் புலி வழங்கும் சோலை,
எனைத்து என்று எண்ணுகோ, முயக்கிடை மலைவே.
- அள்ளூர் நன்முல்லையார்.

பொருளுரை:

அஞ்சுவதை அறியாமல் நான் விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, என் நெஞ்சு நம்மைப் பிரிந்துச் சென்றது. ஆனாலும், இங்கு எஞ்சிய என்னுடைய கைகளால் அவளைத் தழுவ இயலாது. அவளைத் தழுவ முடியாத என் நெஞ்சு அவளிடம் சென்றதால் என்ன பயன்? எனக்கும் தலைவிக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். நான் அவளைத் தழுவுவதற்கு இடையில் உள்ள தடையாக, கரிய கடலின் அலைகளைப் போல் முழங்கி, வலிமையுடன் எழும் கொல்லும் புலிகள் திரியும் சோலைகள் எத்துணை உண்டு என்று நான் எவ்வாறு எண்ணுவேன்?

குறிப்பு:

எவனோ - ஓகாரம் அசைநிலை, இடையே - ஏகாரம் அசை நிலை, திரையின் - இன் உருபு ஒப்புப் பொருளது, எண்ணுகோ - ஓகாரம் அசை நிலை, மலைவே - ஏகாரம் அசை நிலை. வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

சொற்பொருள்:

அஞ்சுவது அறியாது - அஞ்சுவதை அறியாமல், அமர் துணை தழீஇய - விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, நெஞ்சு நப் பிரிந்தன்று - என் நெஞ்சு நம்மைப் பிரிந்துச் சென்றது, ஆயினும் - ஆனாலும், எஞ்சிய கை - இங்கு எஞ்சிய என்னுடைய கைகள், பிணி நெகிழின் - தழுவுதல் நெகிழ்ந்தால், அஃது எவனோ - என்ன பயன், நன்றும் சேய - மிக்க சேய்மையாக உள்ளன, அம்ம - அசைச் சொல், இருவாம் இடையே - இருவருக்கும் இடையே, மாக்கடல் திரையின் முழங்கி - கரிய கடலின் அலைகளைப் போல் முழங்கி, வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை - வலிமையுடன் எழும் கொல்லும் புலிகள் திரியும் சோலைகள், எனைத்து என்று எண்ணுகோ - எத்துணை உண்டு என்று எண்ணுவேன் (எண்ணுகோ = எண்ணுகு + ஓ), முயக்கிடை மலைவே - தழுவுவதற்கு இடையில் உள்ள தடைகள் (மலைவு + ஏ, மலைவு = தடை, இடையூறு)