குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 382

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தகாலத்து அவன் வாராமையால் வருந்திய தலைவியை நோக்கி, “இது கார்ப்பருவமன்று; இப்பொழுது பெய்வது வம்பமழை” என்று தோழி கூறித் தெளிவித்தது.

தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின், . . . . [05]

வாராரோ, நம் காதலோரே?
- குறுங்கீரனார்.

பொருளுரை:

தண்ணிய துளியை எதிர்கொண்ட பசிய கொடியாகிய முல்லையின் அரும்பு மலர்ந்த மணம் புதலினிடத்தே மலர்மிக்க செம்முல்லையோடு தேன்மணக்கும் வண்ணம் நெருங்கித் தோன்றும்படி மேகம் காலமல்லாத காலத்துப் பெய்யும் மழையைப் பெய்யும் இது வம்பன்றி கார்காலமானால் நம்தலைவர் வாராரோ!; வருவார்.

முடிபு:

மழை வம்புப்பெய்யும்; இது கார்ப்பருவமாயின் நம் காதலோர் வாராரோ?.

கருத்து:

இது கார்ப்பருவம் அன்று.