குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 341

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்த காலத்து வருந்துவாளெனக் கவன்ற தோழிக்கு, “அவர் தம் காரியத்தை முற்ற முடித்தபின் வருவரென்று துணிந்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.

பல் வீ படரிய பசு நனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என, . . . . [05]

வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன் - தோழி! - என் வன்கணானே.
- மிளைகிழார் நல்வேட்டனார்.

பொருளுரை:

தோழி! பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம் நெற்பொரியைப் போன்ற பூக்களையுடைய புன்க மரத்தோடு சோலையின் கண் அழகைக் கொண்டு கிளை கண்ணுக்கு இனிதாகத் தோற்றிய இப்பருவத்திலும் தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவாராயினும் பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த மேற்கோள் செலுத்தப்படுவதன் றென்றெண்ணி முன்னர்த் துணியாத என் நெஞ்சம் பின்னர்த் துணிந்தமையால் எனது தறுகண்மையால் உயிரோடு வாழ்வேனாயினேன்.

முடிபு:

தோழி, காதலர் பேணாராயினும் நெஞ்சம் வலிப்ப என்வன்கணான் வாழ்வேன்.

கருத்து:

தலைவர் தம்வினை முடித்து வருவரென்னும் துணிவினால் வாழ்வேனாயினேன்.