குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 353

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பகற்குறி வந்தொழுகும் தலைவன், தலைவி இல்லினின்றும் வெளிப்போதலால் ஊரினர் அறிவரோவென அஞ்சி இரவுக்குறி விரும்பிச்சிறைப்புறத்தே நிற்பத் தலைவியை நோக்கிக் கூறுவாளாய், “நம் அன்னையின் காவல் இரவில் மிக்கது” என்று தோழி இரவுக்குறி மறுக்கும் வாயிலாக வரைவு கடாயது.

ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பெருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் . . . . [05]

பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.
- உறையூர் முதுகூற்றனார்.

பொருளுரை:

பகற் காலத்தில் கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினது தாழ்வரையினிடத்தே ஓசை இனிதாகிய அருவியில் நிறைந்த முழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்பு தெப்பமாக நீர்விளையாடல் இனிய இராக்காலத்தில் பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்விய விளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே நம் தாய் பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி அணைப்ப வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு நாம் துயிலுதல் இன்னாமையையுடையது.

முடிபு:

பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத்துயில் இன்னாது.

கருத்து:

காப்பு மிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது.