குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 347

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரிய எண்ணிய தன் நெஞ்சத்தை நோக்கி, "தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது.

மல்கு சுனை உலர்ந்த நல் கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், . . . . [05]

நன்றே - நெஞ்சம்! - நயந்த நின் துணிவே.
- காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்.

பொருளுரை:

நெஞ்சே முன்பு நீர் மல்கிய சுனை பின்பு வற்றுதலினால் வறுமையுற்ற பாலைநிலத்தில் வளர்ந்த இளமையையுடைய வாகைமரத்தின் கொம்பின் கண் உள்ள நறிய மலர் மடப்பத்தையுடைய கரிய மயிலினது உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றுகின்ற நீண்ட காட்டு வழியில் இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வாளெனின் பொருள் செய்தற்கு விரும்பிய நினது துணிவு நன்மையுடைய தேயாகும்.

முடிபு:

நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.

கருத்து:

தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று.