குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 275

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ - தோழி!
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு . . . . [05]

வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்? - ஆண்டு இயம்பிய உளவே.
- ஒக்கூர் மாசாத்தியார்.

பொருளுரை:

தோழி! அங்கே ஒலிப்பனவாக உள்ளவை மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும் காளையை உடைய பசுவினத்தில் உள்ள புல்லை உண்ட நல்ல பசுக்கள் கழுத்தில் பூண்ட மணி ஓசையோ? தாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய நிறைவுடைய உள்ளத்தோடு வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும் தேரின் மணி ஓசையோ? முல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி கண்டு வருவேம்; வருவாயாக.

முடிபு:

ஆண்டு இயம்பிய உள; ஆன் பூண்மணி கொல்? தேர்மணி கொல்? ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.

கருத்து:

தலைவனது தேரின் மணியோசை கேட்டலின் அவன் வருகின்றானேனத் தோற்றுகின்றது.