குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 367

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைந்து கொள்வானென்பதைத் தலைவிக்கு உணர்த்திய தோழி அவள் உவகை மீதூராமலிருக்கும் பொருட்டு, “தலைவர் தண்ணளி செய்யாராயினும், அவர் மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக” என்று கூறியது.

கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள்கவின் பெறீஇயர்,
உவக்காண் - தோழி! - அவ் வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி . . . . [05]

மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.
- மதுரை மருதனிள நாகனார்.

பொருளுரை:

தோழி! நெகிழ்ச்சியையுடைய பெரிய மழை பெய்யத் தொடங்குதலினால் அத்தலைவருடைய நாட்டிலுள்ள ஆரவாரத்தையுடைய மகளிர்திரள் விரும்பி நீராடும் பொருட்டுப் புகுகின்ற அருவியினால் கழுவப்பட்ட நீலமணியைப்போலத் தோன்றுகின்ற தண்ணிய நறிய குண்டுக்கற்கள் உயர்ந்த மலையை கொடுமையையுடைய தலைவர் தண்ணளி செய்யாராயினும் வளைகள் விளங்கும் சந்துகளையுடைய நின்தோள்கள் அழகு பெறும் வண்ணம் அங்கே வந்தாயாகி பார்ப்பாயாக.

முடிபு:

தோழி, கொடியோர் நல்காராயினும்நின் தோள்கவின் பெறீஇயர், மலையை அவ்வந்திசின்; உவக்காண்.

கருத்து:

நீ தலைவரது மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக.