குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 114

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியைக் குறியிடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க
செல்கம் செல வியம் கொண்மோ அல்கலும்
மார லருந்த வயிற்றஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே . . . . [05]
- பொன்னாகனார்.

பொருளுரை:

இயற்றப்பட்ட தேரை உடைய தலைவ நெய்தல் நிலத்தின் கண் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்; இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றை உடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும்; ஆதலின் யாம் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக.

முடிபு:

கொண்க, பாவை கிடப்பினென்; வந்தனென்; என் மகள் நுதல் நாரை மிதிக்கும்; செல்கம்; செல வியங்கொண்மோ.

கருத்து:

தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.