குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 012

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

‘தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலளாயினாள்’ என்று கவலை உற்ற தோழி கேட்கும்படி, "தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்தே யான் வருந்துகின்றேன் என்பதை உணராமல் இவ்வூர், பிரிவை ஆற்றேனாயினேன் என்று வேறொன்றைக் கூறாநின்றது; இஃது என்ன பேதைமை! "என்று தலைவி சொல்லியது.

எறும்பி அளையின் குறும்பல் சுனைய,
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் சென்ற ஆறே!
அது மற்று அவலம் கொள்ளாது, . . . . [05]

நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
- ஓதலாந்தையார்.

பொருளுரை:

தலைவர் போன வழி யானது எறும்பின் வளைகளைப் போல குறுமையை உடைய பலவாகியசுனையை உடைய கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையை உடைய பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லை உடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என்று கண்டோர் கூறுவர் இந்த ஆரவாரத்தை உடைய ஊரானது அவ்வழியின் கொடுமையைப் பற்றித் துயரத்தை உட்கொள்ளாமல் அயற்றன்மையை உடைய சொற்களைக் கூறி இடித் துரைக்கும்.

முடிபு:

அவர் சென்ற ஆறு கவலைத்து என்ப; ஊர் அவலங் கொள்ளாது கழறும்.

கருத்து:

தலைவர் சென்ற வழி மிக்க கொடுமையை உடையது; அதனைத் தோழி நினைந்திலள்.