குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 265

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைபொருட்குத் தலைவன் பிரிந்தானாக, அவன் வரையாது பிரிந்தான் என வருந்திய தலைவிக்குத் தலைவன் பிரிந்த காரணங் கூறித் தோழி ஆற்றுவித்தது.

காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் . . . . [05]

நன்னர் நெஞ்சத்தன் - தோழி! - நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
- கருவூர்க்கதப் பிள்ளை.

பொருளுரை:

தோழி! காந்தளினது அழகிய கொழுவிய அரும்பை தானாக மலரும் வரையில் காத்து நில்லாமல் வண்டுகள் மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில் முன்பும் தாம் அறிந்த நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரைப் போல இடம் கொடுத்து இதழ்கள் பிணிப்பவிழ்ந்த உயர்ச்சியை உடைய மலைகளை உடைய தலைவன் நினது நிலையை நான் தனக்குச் சொன்னேனாக இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி நாணத்தை அடைந்தான்; அவன் நின்னை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.

முடிபு:

தோழி, நின்னிலை யான் உரைத்தனெனாக, வெற்பன் இஃது ஆகாவாறு நாணினன்; நன்னர் நெஞ்சத்தன்.

கருத்து:

நின்னை வரைந்து கொள்ளுதல் காரணமாகவே தலைவன் பிரிந்தானாதலின் நீ வருந்தற்க.