குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 393

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “தலைவன் நின்னோடு பழகியகாலம் சிறிதாயினும் அதுகுறித்து எழுந்த அலர் பெரிதாயிற்று” என்று தலைவிக்குக் கூறுவாளாய்த் தோழி வரைவின் இன்றியமையாமையை உணர்த்தியது.

மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும் பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை, . . . . [05]

ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
- பரணர்.

பொருளுரை:

தலைவன் விராவிய மலரையுடைய நின் மாலை குழையும்படி அணைந்த நாட்கள் மிகச் சிலவாகும் பழிமொழியோ கோட்டானாகிய கோழியையுடைய வாகை யென்னுமிடத்துள்ள போர்க்களத்தில் பசிய பூணையணிந்த பாண்டியனது ஏவலிலே வல்ல அதிகன் தனது யானையோடு பட்ட காலத்தில் விளங்குகின்ற வாட்படையையுடைய கொங்கர்களுடைய வெற்றியாலுண்டாகிய ஆரவாரத்தினும் மிக்கது.

முடிபு:

மகிழ்நன் முயங்கிய நாள் சிலவே; அலர் ஆர்ப்பினும் பெரிது.

கருத்து:

அலர் மிக்கது.