குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 376

நெய்தல் - தலைவன் கூற்று


நெய்தல் - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சை நோக்கித் தலைவியின் நல்லியல்பு கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது.

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலாளே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை . . . . [05]

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.
- படுமாத்து மோசிகொற்றனார்.

பொருளுரை:

நெஞ்சே நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள தெய்வங்களையுடைய பக்கத்தில் வளர்ந்த சந்தனத்தைப்போல வேனிற்காலத்தில் இத்தலைவி குளிர்ச்சியையுடையாள் பனிக்காலத்தில் அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள் மறைய குவிந்து அழகிதாக அசைகின்ற வெயிலை உட்பொதிந்ததாமரை மலரின் உள்ளிடத்தைப்போன்ற சிறிய வெம்மையை உடையாள்.

முடிபு:

வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.

கருத்து:

தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.