குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 332

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, “தலைவனுக்கு நின்துயர் நிலையைக் கூறினால் என்?” என்று தோழி கூறியது.

வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ - தோழி! - நாறு உயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும் . . . . [05]

மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்.

பொருளுரை:

தோழி! மணம் வீசுகின்ற மூச்சையுடைய மடப்பத்தையுடைய பெண்யானையைத் தழுவி வளைந்த கையையுடைய யானை குன்றினிடத்துள்ள சிற்றூரின்கண் இறங்கிச் செல்லும் மன்றங்கள் பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு வாடை வந்த சிலவாகிய பெயலையுடைய நாளின் கடையாமத்தில் வருத்தத்திலே துளையும் பொறுத்தற்கரிய நின் துன்பம் தீரும் வண்ணம் நீ விரும்பி கூறத்தகுவனவற்றைக் கூறினால் என்ன துன்பம் உளதாகும்?

முடிபு:

தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?

கருத்து:

நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.