குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 209

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் சென்ற தலைவன் அப்பொருளைப் பெற்று மீண்டுவந்து தோழியை நோக்கி, “நான் பிரிந்த விடத்து வேறொன்றையும் நினையாமல் தலைவியின் கூட்டத்தையே நினைந்திருந்தேன்” என்றுகூறும் வாயிலாகத் தனது அன்பைத் தலைவிக்குப் புலப்படுத்தியது.

அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே,
குறுநடை, பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் . . . . [05]

தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

குறுக அடியிட்டு நடக்கும் நடையையுடைய தோழி! வழிப்போவாரது உயிரைத் தாங்கற்குரிய அறத்தைச் செய்யும் நெல்லிமரத்தினது அழகிய பசிய காய்கள் வலியையுடைய புலிக்குட்டிகள் கொள்ளற்குரிய இடத்தில் உதிர்ந்து உருளுகின்ற கடத்தற்கரிய மலைகளை கடந்து சென்ற யாம் அங்ஙனம் சென்றவிடத்து பல பொருள்களை நினைந்தேமல்லேம்; வழியினிடத்தே காட்டினிடத்தில் தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியினது முறுக்கு அவிழ்ந்த பல பேரரும்புகள் மணக்கின்ற மையைப் போன்ற கரிய கூந்தலையுடைய தலைவியினது நட்பையே நினைந்திருந்தேம்.

முடிபு:

குறுநடை, யாம் பல உள்ளலம்; மடந்தை நட்பே உள்ளினேம்.

கருத்து:

நான் எப்பொழுதும் தலைவியையே நினைந்திருந்தேன்.