குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 176

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டு மென்னுங் கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்ற தலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படி தோழி கூறியது.

ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை - யாண்டு உளன்கொல்லோ? . . . . [05]

வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.
- வருமுலையாரித்தியார்.

பொருளுரை:

ஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பல நாட்கள் வந்து பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்ததேனிறாலைப் போலப் போயினவனும் நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடையநல்ல நாட்டிற்பெய்த இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல என் நெஞ்சு! கலங்கும்.

முடிபு:

போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.

கருத்து:

நின்னை ஒரு தலைவன் விரும்பி அலமருகின்றான்.