குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 342

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள் வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.

கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ - பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, . . . . [05]

நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?
- காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.

பொருளுரை:

ஆண்குரங்கு தன்கையால் தோண்டிய மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை காத்தலை மறந்த வேடன் அதன்பின் பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும் மலையையுடைய நாட பசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டிய தண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி இங்கே துன்புற நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை அடையாத இயல்புடையாயென்னின் அவ்வியல்புநினக்குத் தகுமோ?

முடிபு:

நாட, இவள் வருந்த, பண்பினையெனின் தகுமோ?

கருத்து:

நீ இனி இவளை வரைந்து கொள்ள வேண்டும்.