குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 244

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவுக்குறி வந்து ஒழுகிய காலத்தில் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி, வரைவு கடாயது.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் . . . . [05]

உயங்கு தொறும் முயங்கும், அறன் இல் யாயே.
- கண்ணனார்.

பொருளுரை:

பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமையான ஆண் யானையைப் போல் வந்து இரவில் தாழிட்ட எங்கள் இல்லத்தின் கதவை நீ திறக்க முயன்றதை நாங்கள் கேட்காமல் இருக்கவில்லை. கேட்டோம் ஐயா! தலைக் கொண்டை சிதைய, தோகை பாழ்பட, நல்ல மயில் ஒன்று வலையில் அகப்பட்டாற்போல், நாங்கள் வருந்தும்தோறும், வருத்தத்திற்குக் காரணத்தை அறியாத அறம் இல்லாத எங்கள் அன்னை எங்களைத் தழுவினாள். அதனால் உன்னுடைய குறிப்பறிந்தும் உன்பால் வர இயலவில்லை.

குறிப்பு:

யாயே - ஏகாரம் அசை நிலை. நள் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - நளி ‘நள்’ என்பதன் திரிபு. உ. வே. சாமிநாதையர் உரை - ஓரி - ஆண் தலைமயிர். இங்கே ஆண் மயிலின் கொன்றைக்காயிற்று. அறன் இல் யாய் - குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.

சொற்பொருள்:

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து - பலரும் உறங்கும் நள்ளிரவில், உரவுக் களிறு போல் வந்து - வலிமையான ஆண் யானையைப் போல் வந்து, இரவுக் கதவு முயறல் - இரவில் தாழிட்ட கதவைத் திறக்க முயன்றது, கேளேம் அல்லேம் - நாங்கள் கேட்காமல் இருக்கவில்லை, கேட்டனெம் பெரும - கேட்டோம் ஐயா, ஓரி முருங்க - தலைக் கொண்டை சிதைய, பீலி சாய - தோகை பாழ்பட, நன் மயில் வலைப் பட்டாங்கு - நல்ல மயில் வலையில் அகப்பட்டாற்போல், யாம் உயங்கு தொறும் - நாங்கள் வருந்தும்தோறும், முயங்கும் - அணைக்கும், அறன் இல் யாயே - அறம் இல்லாத அன்னை