குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 219

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.

பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
"ஆங்கண் செல்கம் எழுக" என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; முள் இலைத் . . . . [05]

தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன் - தோழி! - "எந்நீரிரோ?" எனினே.
- வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்.

பொருளுரை:

தோழி! பசலையானது எனது மேனியின் கண்ணது; காதல் அவரது அன்பற்ற நெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின் கண்ணது; எனது அடக்கமும் நெடுந்தூரத்தில்.நீங்கியது; எனது அறிவு தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன் பொருட்டு எழுவாயாக என்று நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின் முள் அமைந்த இலையை உடைய பருத்த அடியை உடைய தாழையை உடைய கடற்கரைத் தலைவருக்கு இது தக்க செவ்வியாகும்.

முடிபு:

தோழி, பயப்பு என் மேனியது; நயப்பு ஆரிடையது; செறிவும் இகந்தன்று; அறிவு இருக்கும்; எந்நீரிரோ எனின், சேர்ப்பர்க்கு இடம்.

கருத்து:

தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.