குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 331

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பொருள்வயிற் பிரிய எண்ணியதையறிந்து வருந்திய தலைவியை நோக்கி, "அவர் கொடுமையையுடைய பாலை நிலத்தைக்கடந்து செல்வரோ? செல்லார்" என்று தோழி கூறியது.

நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி - தோழி! - நறுவடிப் . . . . [05]

பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
- வாடாப் பிரபந்தனார்.

பொருளுரை:

தோழி! நறிய வடுவையும் பசிய அடியையுமுடைய மாமரத்தினது அழகிய தளிரை ஒத்த நல்ல மாமைநிறம் பசலையையடைய நம்மைக் காட்டிலும் தலைவருக்குச் சிறந்ததாகத் தோற்றுகின்ற பொருளைக் கொணரும் பொருட்டு நெடியமூங்கில் உலர்ந்த நீர் இல்லாத அரிய இடத்தில் வழியிற் போகும் பிரயாணிகள் அழியும்படி எதிராக நின்று வளைந்த வில்லையுடைய மறச்சாதியார் காட்டைக் கொள்ளையிடும் தறுகண்மையையுடைய யானைகளையுடைய காட்டைக் கடந்து செல்வாரோ?

முடிபு:

தோழி, பொருள்தரற்கு, மேனி பசப்ப, கானம் நீந்தி இறப்பர்கொல்?.

கருத்து:

தலைவர் பொருள்வயிற் பிரிதல் உறுதியன்று.