குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 345

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும் வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கே தங்கிச் செல்க" என்று தோழி கூறியது.

இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர் ஆயின், தவறோ - தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி . . . . [05]

இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?
- அண்டர்மகன் குறுவழுதியார்.

பொருளுரை:

நெய்தல் நிலத் தலைவனே! அணிகலனுடைய உன்னுடைய உயர்ந்த தேரை மலையைப் போன்ற மணல் மேடுகள் நிறைந்த நீண்ட கடற்கரையில் நிறுத்தி விட்டு, அங்கு நின்று தங்கினால், தவறு என்ன? இலைகளால் செய்யப்பட்ட ஆடையை இடைப் பகுதியில் அணிந்திருக்கும் என்னுடையத் தோழி, தாழை மரங்கள் நிறைந்த, ஒலிக்கும் விளங்கிய அலைகளைக் கொண்ட, வளைந்த கடற்கரையில் தனிமையில் புலம்புகின்றாள். கடலை வேலியாகக் கொண்டது எங்கள் சிறிய ஊர்.

முடிபு:

தவிர்த்து நின்று அசைஇ, புலம்பு அகல நல்லூரில் தங்கினிராயின் தவறோ!

கருத்து:

இனி நீர் இரவில் வந்து தலைவியோடு அளவளாவுவீராக.

குறிப்பு:

தெய்ய: அசை நிலை. ஊர் - அசை நிலை. இரா. இராகவையங்கார் உரை - இழுமென ஒலிக்கும் என்பதால் பகல் வருதல்பற்றி அலர் தொடங்கிற்றென்று குறித்தாளாம். தாழை தைஇய……அங்கண் என்பதனால் இரவிற் சேர்தற்குக் குறியிடம் உணர்த்தினாளாம். தாழை தைஇய என்பதனால் மறைவும், கொடுங்கழி என்பதனாற் பிறர் புகாமையும், ஒலிக்கும் என்பதனால் நீவிர் உரையாடினும் அரவங் கேளாமையும் கருதி உரைத்தாள் ஆவள்.

சொற்பொருள்:

இழை அணிந்து - அணிகலன் அணிந்து, இயல்வரும் - இயன்று வரும், கொடுஞ்சி - தேரின் முன்னால் உள்ள தாமரை மொட்டு போன்ற வடிவம், நெடுந்தேர் - உயர்ந்தத் தேர், வரை மருள் நெடுமணல் - மலையை ஒத்த மணல் மேடுகள் (மருள் - உவம உருபு), தவிர்த்து - நிறுத்தி, நின்று அசைஇ - நின்று அங்குத் தங்கி (அசைஇ - அளபெடை), தங்கினிர் ஆயின் தவறோ - தங்கினால் என்ன குறைவு?, தெய்ய - ஓர் அசைச் சொல், தழை - இலைகள், தாழ் - தொங்கும், அல்குல் - இடையின் அடிப்பகுதி, இவள் புலம்பு - தனிமையில் வருந்த, அகல - செல்ல, தாழை - தாழை, தைஇய - அணிந்த (அளபெடை), தயங்கு திரை - விளங்கிய அலைகள், கொடுங்கழி - வளைந்த உப்பு நீர் உடைய கடற்கரை, இழுமென ஒலிக்கும் - பெரும் ஒலியுடன், ஆங்கண் - ஆங்கு, பெருநீர் - கடல், வேலி - வேலி, எம் சிறுநல் ஊரே - எங்கள் சிறிய ஊர்