குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 396

பாலை - செவிலி கூற்று


பாலை - செவிலி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுடன் தலைவி சென்றபின் செவிலித்தாய் அவளது இளமைத் தன்மையையும் பாலையின் வெம்மையையும் நினைந்து வருந்திக் கூறியது.

பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள் கொல்லோ - முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் . . . . [05]

மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திறங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
- கமயனார்.

பொருளுரை:

பாலையும் உண்ணாளாகி பந்தையும் விரும்பாளாகி முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி இப்பொழுது உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை வேனிலின் தன்மையையுடைய மலையினிடத்துள்ள வெம்மையாகிய அடிவாரத்தில் மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும் மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய இடத்திலே அத்தலைவனோடு செல்லுதல் எளிமையையுடையதென்று அறிந்தாளோ?

முடிபு:

உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள் கொல்லோ?.

கருத்து:

தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதென நினைத்தனளோ?