குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 251

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது தலைவி வருந்த, "இது கார்காலமன்று; இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று தோழி வற்புறுத்திக் கூறி ஆற்று வித்தது.

மடவ வாழி - மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன;
கார் அன்று - இகுளை! - தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், . . . . [05]

புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
- இடைக்காடனார்.

பொருளுரை:

தோழி! சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு சொரிகின்ற அயன்மையை உடைய மேகத்தினது ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு மயில்களாகிய கரிய கூட்டங்கள் பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி அம் மழைக்கு எதிரே ஆடுதலைச் செய்தன; பிடாவும் மலர்ந்தன; அவை அறியாமையை உடையன; இது கார்காலம் அன்று; ஆதலின்; நின் துன்பத்தை விடுவாயாக.

முடிபு:

இகுளை, கேட்டு மஞ்ஞையினம் ஆலின; பிடவும் பூத்தன; மடவ; காரன்று; நின் படர் தீர்க.

கருத்து:

இது கார்காலம் அன்று.