குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 009

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவன் வாயில் (இல்லத்தில் புகுதல்) வேண்டிப் புகுந்தவிடத்துத் தோழி தலைவனிடம் நீ அவளை அடைதல் எளிதெனக் கூறுகின்றாள்.

யாய் ஆகியவளே மாயோளே,
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் . . . . [05]

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை,
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
- கயமனார்.

பொருளுரை:

மாநிறமான என் தோழி மிக நல்ல பண்புடையவள். மூட்டுவாய் பொருந்திய மாட்சிமையுடைய பெட்டியில் வைத்த அணியாத மலர்கள் வாடியதைப்போல், அவளுடைய உடம்பு வாடி விட்டது. மீன் கூட்டங்கள் நிறைந்த பெரிய உப்பு நீர்க் குளங்களில் கடல் நீர் பெருகி வருகின்ற வேளைதோறும் குவளை மலர்கள் பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து, குளத்தில் மூழ்கிக் குளிக்கும் பெண்களின் கண்களைப் போல் தோன்றும் குளிர்ந்த துறையின் தலைவனின் கொடுமையை அவள் நம்மிடம் மறைக்கின்றாள், நாணத்துடன்.

குறிப்பு:

நெய்தலுள் மருதம். தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனை ஏற்றுக்கொள்வாள் என்பது கருத்து. ஆகியவளே - ஏகாரம் அசைநிலை, மாயோளே - ஏகாரம் அசைநிலை, சாயினளே - ஏகாரம் அசைநிலை, கண்ணின் - ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது. இரா. இராகவையங்கார் உரை - தண்ணந்துறைவன் கண்கள் அல்லாத நெய்தல்களை இவையும் கண்கள் என்று வேறு சொல்ல ஒக்கும் துறையையுடையவன் ஆதலால், தன் கண்ணாகிய தலைவியல்லாத பரத்தையைக் கண்டார் இவற்கு இவளும் கண்ணாவாள் எனப் பேணி ஒழுகுபவன் என்று அவன் தலைவியை பேணாது ஒழுகுதலைக் குறித்தாள். யாய் ஆகியவள் (1) - இரா. இராகவையங்கார் உரை - குற்றம் பொருத்துரையாடும் சிறப்பால் யாய் ஆயினள் என்றாள், உ. வே. சாமிநாதையர் உரை - தலைவியை யாயென்றது, புலத்தற்கு காரணமான பரத்தமை தலைவன் பால் உளதாகவும் அதை மனங் கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி, ச. வே. சுப்பிரமணியன் உரை - தாய்போல் மதிக்கத் தக்கவள், தமிழண்ணல் உரை - பொறுமையில் தாய் போல ஆகினாள், கற்புக்கடம் பூண்ட நம் தலைவி தாய்போல் மதிக்கத்தக்க பெருமையுடையவளே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - தாயென தக்காள் ஆயினள்.

சொற்பொருள்:

யாய் ஆகியவளே - நல்ல பண்பு உடையவள், மாயோளே - மாமை நிறத்தை உடையவள் (மாந்தளிர் மேனி), மடை - மூட்டுவாய், மாண் - மாட்சியுடைய, செப்பில் - பெட்டியில், தமிய - தனியாக, வைகிய - வைத்த, பெய்யாப் பூவின் - அணியாத மலர்களைப்போல் (பூவின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மெய் சாயினளே - உடம்பு வாடியவள், பாசடை - பசுமையான இலைகள், நிவந்த - மேலே, கணைக்கால் - பெரிய காம்பு, நெய்தல் - குவளை மலர்கள், இனமீன் - மீன் கூட்டம், இருங்கழி - உப்பு நீர்க் குளங்கள், ஓதம் - வெள்ளம், மல்கு தொறும் - நிறையும் பொழுதெல்லாம், கயம் மூழ்கு மகளிர் - குளத்தில் குளிக்கும் பெண்கள், கண்ணின் மானும் - கண்களைப் போன்று இருக்கும் (கண்ணின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் உவம உருபோடு வந்தது, மான என்பது வினை உவமைத்தின்கண் வந்தது), தண்ணந்துறைவன் - நெய்தல் நிலத்தலைவன் (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் - சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), கொடுமை - கொடுமை, நம் முன் நாணி - நம் முன்னால் அவமானப் பட்டு, கரப்பு ஆடும் - அதை மறைப்பாள் (கரப்பாடும்மே - செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)