குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 379

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

அயலார் தலைவியை வரையும்பொருட்டு வந்த காலத்துத் தலைவிக்குக் கூறுவாளாய், “முன்பு நின்பால் அன்பு பூண்ட தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ?” என்று தோழி தாய் முதலியோருக்கு உண்மையை வெளிப்படுத்தியது.

இன்று யாண்டையனோ - தோழி! - குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூமணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப் . . . . [05]

பொம்மல் ஓதி நீவியோனே?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

தோழி! குன்றினிடத்தே பழைய குழியைத் தோண்டிய வேட்டுவன் கிழங்கினொடு! இடம் அகன்ற தூய மணியைப் பெறும் நாட்டையுடையவனும் செறிந்த தொடியையுடையாய் நின் அறிவு முதிர்கின்ற பருவத்தில் நீ எம்முடைய வீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாயென்று கூறி நெருக்கத்தையுடைய கூந்தலை தடவியவனுமாகிய தலைவன் இன்று எவ்விடத்தில் உள்ளானோ?

முடிபு:

தோழி, நாடன் நீவியோன் இன்று யாண்டையனோ?.

கருத்து:

நின்பால் அன்புபூண்ட தலைவன் இப்பொழுது எங்கே உள்ளானோ?