குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 084

பாலை - செவிலி கூற்று


பாலை - செவிலி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.

பெயர்த்தனென்முயங்கயான்வியர்த்தனன் என்றனள்
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே . . . . [05]
- மோசிகீரனார்.

பொருளுரை:

நான் அவளை மீண்டும் மீண்டும் தழுவிய வேளையில், “நான் வியர்வை அடைந்தேன்” என்று என்னிடம் கூறினாள். இப்பொழுது அறிந்தேன், அவளுக்கு வெறுப்பு உண்டாகியது ஏன் என்று. சுழலும் தொடியை அணிந்த ஆய் அண்டிரன் என்ற மன்னனின் முகில்கள் தவழும் பொதியை மலையில் உள்ள வேங்கை மலர்கள் மற்றும் காந்தள் மலர்கள் ஆகியவற்றின் நறுமணத்தைப் பரப்பிய என் மகள், ஆம்பல் மலரைவிடக் குளிர்ச்சியானவள்.

குறிப்பு:

வேங்கை, காந்தள் ஆகிய மலர்களின் நறுமணம், தலைவி தலைவனுடன் களவு ஒழுக்கத்தில் இருந்தாள் என்பதைக் குறிக்கின்றது. தான் - அசை நிலை, தண்ணியளே - ஏகாரம் இரக்கக் குறிப்பு. ஆய் - கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆய், காரி, பாரி, ஓரி, நள்ளி, அதிகன், பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள்.

சொற்பொருள்:

பெயர்த்தனென் முயங்க - நான் அவளை மீண்டும் மீண்டும் தழுவ, யான் வியர்த்தனென் என்றனள் - நான் வியர்வை அடைந்தேன் என்று கூறினாள், இனி அறிந்தேன் - இப்பொழுது அறிந்தேன், அது துனி ஆகுதலே - அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியதை, கழல் தொடி ஆய் - சுழலும் தொடியை அணிந்த ஆய் அண்டிரன், மழை தவழ் பொதியில் - முகில்கள் தவழும் பொதியை மலையில், வேங்கையும் காந்தளும் நாறி - வேங்கை மலரின் நறுமணத்தையும் காந்தள் மலரின் நறுமணத்தையும் வீசி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - ஆம்பல் மலரைவிட அவள் குளிர்ச்சியானவள்.