குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 357

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவியை நோக்கி, “நின் தோள்கள் தலைவனோடு நீ நட்புச் செய்யாததன்முன் நல்லனவாக இருந்தன” என்று தோழி கூறியது.

முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் . . . . [05]

ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன்படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோள் வெற்பன் மணவா ஊங்கே.
- கபிலர்.

பொருளுரை:

மூங்கிலினதுஅழகு நெகிழ்ந்த நின் தோள்கள் வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய துயிலுதலில்லாத மையுண்ட கண்களில் உண்டாகும் துளி குறுக்கே சென்று இப்பொழுது மெலிவையுடையவாதலினால் தினைச் சாதியுள் அழகிய சிறிய தினையைக் காக்கின்ற பரணின் மேலுள்ள குறவனது கொள்ளிக் கட்டையினால் அஞ்சிப்போன உயர்ந்த நல்ல யானை யானது விண்மீன் வீழ்வதனால் உண்டாகிய மிக்க ஒளியை அஞ்சுகின்ற வானத்தை அளாவிய மலையையுடைய தலைவன் பொருந்துதற்கு முன்பு விரும்பும்படி பருத்து இவை நல்லன என்று கூறப்படும் சொற்களை அடைந்தன.

முடிபு:

தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லை மன்னிய.

கருத்து:

தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்பு உண்டாகின்றது.