குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 389

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனை அவனுடைய குற்றேவன் மகனால் அறிந்த தோழி அக்குற்றேவன் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்தியது.

நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக - தோழி! அத்தை
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே. . . . . [05]
- வேட்டகண்ணனார்.

பொருளுரை:

தோழி! பெரிய மலைநாட்டையுடைய தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டானாக அவனுக்குமுன் குற்றேவன் மகனே நலமா என்று கேட்டேன் நலமேஎன்று கூறிய அவன் நெய் மிகஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியாக உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!

முடிபு:

தோழி, நாடன் வரைந்தென நன்றோ என்றனென்; நன்றேபோலும் என்றுரைத்தோன் ஆர்பதம் பெறுக!

கருத்து:

தலைமகனுடைய குற்றேவன்மகனால் தலைவன் வரைவு மேற்கொண்டமையை யுணர்ந்தேன்.