குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 048

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பகற்பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதால் துயருற்ற தலைவியின் மேனியில் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானதைக் கண்டு வருந்தித் தோழி கூறியது.

‘தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும், கையாறு ஓம்பு’ என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பினினை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்கவன்ன, . . . . [05]

நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே?
- பூங்கணுத்திரையார்.

பொருளுரை:

“பூந்தாதினால் செய்த மிக்க குளிர்ந்த விளையாட்டுப் பாவை காலை வெயிலில் வருந்தும். அதனைக் காப்பாயாக” என்று விளையாட்டு மகளிர் சொல்லக்கேட்டும், இத்தகைய பண்புடன் பெரிதும் துன்புறும், நல்ல நெற்றியையுடைய இத்தலைவியின் பசலை நீங்கும்படி அவளுக்கு விருப்பத்தை உண்டாக்கும் ஒரு சொல்லைக் கூற, இந்நோய் தந்த காதலருக்கு இயலாதா?

குறிப்பு:

ஒப்புமை: குறுந்தொகை 48 - தாதின் செய்த தண் பனிப் பாவை, அகநானூறு 392 - தாது செய் பாவை அன்ன. நன்னுதல் - அன்மொழித்தொகை, கேட்டும் - உம்மை உயர்வு சிறப்பு, கொல்லோ - கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, தமக்கே - ஏகாரம் அசைநிலை. காதலர் தமக்கு - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - தம் சாரியை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - காலை வருந்தும் கையாறு என்றது, காலை வெயிலிலே கிடந்து முறுகும் என்றவாறு. அது காலை வெயிலில் கிடந்து முறுகுதலைப் பிள்ளையுறும் துன்பமாகக் கருதிக் கையாறு என்றாள். கையாறு ஓம்பலாவது அப்பாவையை எடுத்து அது அழுமாறு போலக் கொண்டு அவ்வழுகை தணியப் பாராட்டுதல்.

சொற்பொருள்:

தாதின் செய்த தண் பனிப் பாவை - பூந்தாதினால் செய்த மிக்க குளிர்ந்த விளையாட்டுப் பாவை, காலை வருந்தும் கையாறு ஓம்பு - காலை வெயிலில் வருந்தும் அதனைக் காப்பாயாக, என ஓரை ஆயம் கூறக் கேட்டும் - என்று விளையாட்டு மகளிர் சொல்லக்கேட்டும், இன்ன பண்பினினை பெரிது உழக்கும் - இத்தகைய பண்புடன் பெரிதும் துன்புறும், நன்னுதல் பசலை நீங்கவன்ன - நல்ல நெற்றியையுடைய இத்தலைவியின் பசலை நீங்கும்படி, நசையாகு பண்பின் ஒரு சொல் - விருப்பத்தை உண்டாக்கும் ஒரு சொல், இசையாது கொல்லோ காதலர் தமக்கே - இந்நோய் தந்த காதலருக்கு இயலாதா?