குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 349

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகன் பரத்தையரிடமிருந்து வந்த காலத்தில் தோழி "நம் நலந்தாவெனக் கேட்போம்" என்றவிடத்து, "ஒருவருக்குக் கொடுத்த பொருளைமீட்டுப் பெறுதலினும் உயிரிழத்தல் சிறந்தது" என்று தலைவி கூறியது.

'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி - தோழி! - கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய . . . . [05]

கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
- சாத்தனார்.

பொருளுரை:

தோழி! அடும்பின் கொடியினிடத்தே மலர்ந்த அழகிய மலரை சிதைத்து மீனை உண்ணுகின்ற வளைந்த காலையுடைய நாரை தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய தண்ணிய துறையையுடைய தலைவனை வளைத்து நாம் இழந்த பெண்மை நலத்தைப் பெறுவேமென்று கூறுகின்றாய் அங்ஙனமே கொள்வேம் தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி யாசிப்பவர் விரும்பி இரந்தவற்றை கொடுத்துப்பிறகு அங்ஙனம் கொடுத்த அவற்றைத் தருக என்று சொல்லுதலைக் காட்டிலும் நமது இனிய உயிரை இழத்தல் இன்னாமையையுடையதோ? அன்று; ஆதலின் அது கருதிலேன்.

முடிபு:

தோழி, துறைவற்றொடுத்து நலம் கொள்வா மென்றி; கொள்வாம்; கொடுத்தவை தாவென் சொல்லினும் நம் இன்னுயிரிழப்பு இன்னாதோ?

கருத்து:

தலைவனை நலந்தாவெனக் கேட்டல் தக்கதன்று.