குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 318

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தே நிற்பத் தோழிக்குக் கூறுவாளாய், "தலைவன் பிரியேனென்று சூள்செய்தான். அதனைக் காப்பாற்றுதல் அவன் கடன். அதனை அவனே அறியவேண்டுமன்றி யான் கூறுதலாற் பயனில்லை" என்று தலைவி கூறி விரைவில் வரைய வேண்டுமென்னும் குறிப்பை உணர்த்தியது..

எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயல் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் . . . . [05]

பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
- அம்மூவனார்.

பொருளுரை:

தோழி! அடைந்தாரை எறிகின்ற சுறாமீன்கள் மிக்க விளங்கிய கடற்பரப்பினிடத்து நறிய ஞாழற்பூவோடு புன்னை மலரும் பரவி வெறியாடும் இடத்தைப் போலத் தோன்றுகின்ற துறையையுடைய தலைவன் என்னை வரைந்து கொள்ளுதலை நெஞ்சுட் குறிக்கொள்ளானாயினும் குறிக்கொண்டானாயினும் அயலார் வரைவாகிய வேறு ஒன்று நேருமென்பதை அறியாத அவனுக்கு நான் சொல்லுவேனோ? இப்பொழுது இளைத்த இந்த மூங்கிலைப் போன்ற அழகையுடைய மெல்லிய தோள்களை அணைந்த அந்த நாளிலே தான் நம் திறத்துப் பிழையாமையைப் புலப்படுத்தும் சூளைச்செய்த வஞ்ச நெஞ்சுடையவனும் அவ்வஞ்சினத்தை நிறைவேற்றும் கடப்பாடுடையவனும் நமக்கோர் புணைபோன்று இருப்பவனும் அத்தலைவனே; அன்றிப் பிறரில்லை.

முடிபு:

துறைவன் குறியானாயினும் குறிப்பினும், அறியாற்கு யான் உரைப்பலோ! அணைஇய அந்நாள் வஞ்சினஞ் செய்து கள்வனும் கடவனும் புணைவனும் தானே.

கருத்து:

தலைவன் தன் மொழி தவறாது வரைந்து கொள்ளவேண்டும்.