குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 238

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையினிடத்தில் இருந்து மீண்டு வந்த தலைவன் தோழியின்பாற்சூள் கூறித் தெளிவிக்கப் புகுகையில், ‘‘எம் நலனைத் தந்து நின்சூளைக் கொண்டு செல்க’’ என்று அவள் கூறி வாயில் மறுத்தது.

பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ - மகிழ்ந! - நின் சூளே . . . . [05]
- குன்றியனார்.

பொருளுரை:

மகிழ்ந! பச்சை அவலை இடித்த கரிய வயிரம் பொருந்திய உலக்கையை அழகிய கதிரை உடைய நெற் பயிரை உடைய வயலினது வரப்பாகிய அணையிலே படுக்க வைத்து ஒள்ளிய வளையை உடைய பெண்கள விளையாட்டைச் செய்யும் தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு நினது சூளைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக.

முடிபு:

மகிழ்ந, என் நலம் தந்து நின் சூள் கொண்டனை சென்மோ.

கருத்து:

நீ சூள் கூறுவதனால் யாம் மயங்கேம்.