குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 328

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி, "அலரை அஞ்சற்க; அவ்வலர் நன்மையையே விளைக்கும்" என்று தோழி கூறியது.

சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் . . . . [05]

வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலிநோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
- பரணர்.

பொருளுரை:

சிறியமலரையுடைய ஞாழல் மரத்தின் வேரின்கண் அமைக்கப்பட்ட வளையிடத்திலுள்ள நண்டினது சிறிய வீடு அழியும்படி அலைகள் குறுந்தடிவாய்த்த முரசைப் போல வீசி முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன் தண்ணளிசெய்த நாட்கள் மிகவும் சிலவேயாகும்; பழிமொழியோ விற்படையைக் கொண்ட படைகளையுடைய விச்சியர்களுக்குத் தலைவன் அரசர்களோடு போர் செய்த காலத்தில் பாணர்களது புலியினது பார்வையை ஒத்த நிலையினாற் காணப்பட்ட ஆரவாரமிக்க குறும்பூரினிடத்திலுள்ளார் செய்த முழக்கத்தினும் பெரிய முழக்கத்தையுடையதாயிற்று.

முடிபு:

துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே; அலர் ஆர்ப்பினும் பெரிது.

கருத்து:

அலர் மிகுதியாயிற்று.