குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 271

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு உடம்பட்டுத் தூதாக வந்த தோழியை நோக்கி, "தலைவரோடு ஒரு நாள் நட்புப் பூண்டேன்; அது பல நாளும் எனக்குத் துன்பம் தருவதாயிற்று. அவ்வொரு நாள் செய்த நட்புப் பற்றியே ஏற்றுக் கொள்வேன்" என்றது.

அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று - அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வெளவும் பண்பின் நோய் ஆகின்றே . . . . [05]
- அழிசி நச்சாத்தனார்.

பொருளுரை:

தோழி! அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி ஆறு வெள்ளத்தைக் கொண்டு ஒலிக்கும் நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து அவனோடு பொருந்திய காலம் ஒரு நாளே ஆகும; அங்ஙனம் பொருந்தியது மிகப் பல நாட்கள் தோளோடு கலந்து அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய நோயாக ஆகின்றது.

முடிபு:

நாடனை உற்றது ஒரு நாள்; அது மயங்கி நோயாகின்று.

கருத்து:

அறங்கருதித் தலைவனை ஏற்றுக் கொள்கின்றேன்.