குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 006

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

திருமணப் பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த பொழுது ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் யாவரும் துயிலவும் ‘யான் துயின்றிலேன்’ என்று தோழியிடம் கூறியது.

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்,
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!
- பதுமனார்.

பொருளுரை:

நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது, ஆனால் நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன்.

குறிப்பு:

நள்ளென்றன்றே (1) - உ. வே. சாமிநாதையர் உரை - செறிந்த இருளை உடையதாக இரா நின்றது, நள்ளென்னும் ஓசையை உடையதாயிற்று எனலுமாம். மாக்கள் (2) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மாக்கள் என்று இழிவுதோன்றக் கூறினாள், உ. வே. சாமிநாதையர் உரை - ஐயறிவுடையோர் என்பது தாய் முதலியோரை, மாவும் மாக்களும் ஐ அறிவினவே (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 32). முனிவின்று (2) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இன்றி என்னும் வினையெச்சத்து இறுதி இகரம் செய்யுள் ஆகலின் இன்று என்று உகரமாகத் திரிந்தது, இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35). ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (4) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - எனக்கு உசாத்துணையாய் ஆற்றுவிக்கும் கடமையுடைய நீயும் இனிதே தூங்கினை என இடித்துக் கூறினபடியாம். நள்ளென்றன்றே: ஏகாரம் அசை நிலை, அடங்கினரே: ஏகாரம் அசை நிலை, துஞ்சாதேனே: ஏகாரம் அசை நிலை. நனம் - நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80). மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:

நள்ளென்றன்றே யாமம் - நடு இரவு இருட்டாக இருந்தது (நள் - நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு), சொல் அவிந்து - சொற்கள் அடங்கின, இனிது அடங்கினரே - இனிமையாக உறங்கினர், மாக்கள் - மக்கள், முனிவு இன்றி - வெறுப்பின்றி, நனந்தலை - அகன்ற, உலகமும் துஞ்சும் - உலகமும் உறங்குகின்றது, ஓர் யான் - நான் மட்டும், மன்ற - உறுதியாக (தேற்றப் பொருளில் வந்தது), துஞ்சாதேனே - உறங்காமல் இருக்கின்றேன்