குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 032

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தோழியிடம் தன்னுடைய குறையைக் கூறி அவள் உடன்படாததை அறிந்த தலைவன், அவளுடைய உதவியை விரும்பி, அவளை இரந்து நின்றான்.

காலையும், பகலும், கை அறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றி,
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்,
மா என மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே, . . . . [05]

வாழ்தலும் பழியே, பிரிவுதலை வரினே.
- அள்ளூர் நன்முல்லையார்.

பொருளுரை:

காலையும், பகலும், செயலற்று இருக்கும் மாலையும், ஊர் தூங்கும் நடு இரவும், விடியும் பொழுதும், ஆகிய இப்பொழுதுகள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தால், அத்தகையோருடைய காதல் உண்மையானது இல்லை. பனை மடல் குதிரையில் ஏறி நான் தெருவில் சென்றால் கண்டிப்பாக இழிவான பேச்சும், பழியும் ஏற்படும். இந்த நிலையில், அவளிடமிருந்து பிரிந்தால், வாழ்வதும் பழி தான்.

குறிப்பு:

இப் பொழுது இடை (3) - தமிழண்ணல் உரை - இப்பொழுதுகள் இடையே தெரியின், உ. வே. சாமிநாதையர் உரை - இச் சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின், இடை வேறுபாடுமாம், இரா. இராகவையங்கார் உரை - இப்பொழுதுகளின் செவ்வி, பொழுதும் இடமும் என்பதும் பொருந்தும். பொய்யே காமம் (3) - உ. வே. சாமிநாதையர் உரை - காமம் உண்மைக் காமம் அன்று, தமிழண்ணல் உரை - காமம் என்பது பொய்யே, இரா. இராகவையங்கார் உரை - காமம் பொய்யே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - பொய்யாகுமோ காமம், பொய்யே என்பதில் ஏகாரம் வினா. பொய்யே - ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, பழியே, வரினே - ஏகாரங்கள் - அசை நிலைகள்.

சொற்பொருள்:

காலையும் பகலும் - காலையும் பகலும், கை அறு மாலையும் - செயலற்று இருக்கும் மாலையும், ஊர் துஞ்சு யாமமும் - ஊர் உறங்கும் நடு இரவிலும், விடியலும் - விடியும் பொழுதும், என்ற இப் பொழுது இடை தெரியின் - என்ற இப்பொழுதுகள் இடையே தெளிவாகத் தெரிந்தால், என்ற இடையில் உள்ள பொழுதிலும் தெளிவாகத் தெரிந்தால், என்ற இப்பொழுதும் இடமும் தெரிந்தால், பொய்யே காமம் - காதல் உண்மையானது இல்லை, மா என மடலோடு - குதிரையின் மடலுடன், மறுகில் தோன்றி - தெருவில் தோன்றி, தெற்றென - தெளிவாக, தூற்றலும் - வம்புப் பேச்சும், பழியே - பழியே, வாழ்தலும் பழியே - வாழ்வதும் பழி தான், பிரிவுதலை வரினே - நான் அவளிடமிருந்து பிரிந்தால்