குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 194

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின் ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன் ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.

என் எனப்படுங்கொல் - தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? . . . . [05]
- கோவர்த்தனார்.

பொருளுரை:

தோழி! மின்னி மேகம் எழுந்து ஒலிக்கின்ற செயல் ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அந்த மேகம் ஒலித்ததற்கு எதிரே காட்டிலுள்ள மயில்கள் விரைவனவாகி ஆரவாரிக்கும்; இவ்வாறு அயன்மையை யுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும் எனது பேதைமையை யுடைய நெஞ்சம் பெரிய கலக்கத்தை அடையும்; இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?

முடிபு:

தோழி, வான் இரங்கும் ஒன்றோ? மஞ்ஞை ஏங்கும்; இரண்டற்கு என் நெஞ்சம் மலக்குறும்.

கருத்து:

கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.