குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 153

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.

குன்றக் கூகை குழறினும், முன்றில்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சுமன், அளித்த என் நெஞ்சம், இனியே
ஆர் இருள் கங்குல் அவர் வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

முன்பு, குன்றத்தில் உள்ள பேராந்தை ஒலித்தாலும், முற்றத்தில் உள்ள பலா மரத்தின் பெரிய கிளையில் ஆண் குரங்கு தாவி துள்ளினாலும், அச்சத்தை அடைந்த என் நெஞ்சம், இப்பொழுது அவரிடம் செல்வதற்கு அடர்ந்த இருளை உடைய இரவில் மலைச் சரிவில் உள்ள நீண்ட வழியில் செல்லுதலை தவிர்க்காது. அது இரங்குதற்கு உரியது.

குறிப்பு:

இனியே - ஏகாரம் அசை நிலை, ஆனாதே - ஏகாரம் அசை நிலை. கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் - அகநானூறு 158 - வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 218 - பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 - குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்த என் நெஞ்சம். மன் - கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:

குன்றக் கூகை குழறினும் - குன்றத்தில் உள்ள பேராந்தை ஒலித்தாலும், முன்றில் - முற்றத்தில், பலவின் இருஞ் சினை - பலா மரத்தின் பெரிய கிளையில், கலை பாய்ந்து உகளினும் - ஆண் குரங்கு தாவி துள்ளினாலும், அஞ்சுமன் - அஞ்சும் (மன் - கழிவுக் குறிப்பு), அளித்த - இரங்குதற்கு உரிய, என் நெஞ்சம் - நெஞ்சம், இனியே - இப்பொழுது, ஆர் இருள் - அடர்ந்த இருள், கங்குல் - இரவு, அவர் வயின் - அவரிடத்து, சாரல் நீள் இடை - மலைச் சரிவில் உள்ள நீண்ட வழியில், செலவு ஆனாதே - செல்லுதலை தவிர்க்காது