குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 130

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது. அல்லது தோழி தலைவனிடம் தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியது.

நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே? . . . . [05]
- வெள்ளி வீதியார்.

பொருளுரை:

நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரியக் கடல் உள்ளும் நடந்துச் செல்லவில்லை. நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள் தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா?

குறிப்பு:

புகாஅர் - இசை நிறை அளபெடை, காதலோரே: ஏகாரம் - அசை நிலை. அகநானூறு 147 - நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே. அகநானூறு 236 - ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி. தோழி தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியதுமாம். அகநானூறு 147 - நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே. அகநானூறு 236 - ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி. குடி முறை (4) - உ. வே. சாமிநாதையர் உரை - குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினாள். குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - குடிகள்தோறும், தமிழண்ணல் உரை - தனித்தனி குலம். இது சாதி வழிப் பிரிவன்று. பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது. பொ. வே. சோமசுந்தரனார் உரை - தோழி கூற்றாயின், ‘அங்ஙனம் ஆராய்ந்து தலைவனைத் தேடிக் கொணர்வன். நீ ஆற்றியிரு’ என்பது குறிப்பெச்சம். தலைவி கூற்றாயின், ‘நீ அங்ஙனம் முயன்று அவரைத் தேடித் தாராய் ஆயின் யான் இறந்துபடுவல்’ என்பது குறிப்பெச்சம். முந்நீர் - தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது. முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது - வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் - ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் - நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:

நிலந்தொட்டுப் புகார் - அவர் நிலத்தைத் தோண்டி உள்ளே நுழையவில்லை, வானம் ஏறார் - அவர் வானத்திற்குள் ஏறவில்லை, விலங்கு இரு முந்நீர் - விலக்கும் பெரிய கடலில், காலில் செல்லார் - காலினால் நடந்து செல்லவில்லை அவர், நாட்டின் நாட்டின் - நாடுகள் தோறும், ஊரின் ஊரின் - ஊர்கள் தோறும், குடிமுறை குடிமுறை - முறையாகக் குடிகள்தோறும், தேரின் - தேடினால், கெடுநரும் உளரோ - அகப்படாமல் போய் விடுவாரா, நம் காதலோரே - நம் தலைவர்