குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 038

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழியிடம் கூறியது.

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன், வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப . . . . [05]

உள்ளாது, ஆற்றல் வல்லுவோர்க்கே.
- கபிலர்.

பொருளுரை:

தோழி! காட்டு மயில்கள் பாறையில் இட்ட முட்டைகளை, கருங்குரங்கின் குட்டிகள் வெயிலில் உருட்டி விளையாடும் நாடவனின் நட்பு எனக்கு மிகவும் நல்லது. ஆனால், அவன் பிரிந்தால் மை இடப்பட்ட என் கண்களில் நீர் பெருகுகின்றது. அப்பிரிவைப் பற்றி வருந்தாமல் இருக்கும் ஆற்றல் மனதில் வலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லை.

குறிப்பு:

வெயில் - வெய்யில் என்பதன் விகாரம், மன் மிகுதியை உணர்த்தியது, வாழி - முன்னிலை அசை வல்லுவோர்க்கே: ஏகாரம் - பிரிநிலை, மன் மிகுதியை உணர்த்தியது, மன் ஒழியிசைப் பொருளில் வந்ததாகக் கொண்டால் ‘யான் அதைப் பெற்றிலேன்’ என வரும். தமிழண்ணல் உரை - மயில் போட்டுவிட்டுப் போன முட்டையை விளையாடும் குரங்குக் குட்டி உருட்டுகின்றது, தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை ஊரார் பேசும் அலர் மேலும் துன்புறுத்துவதை இது குறிக்கின்றது. இரா. இராகவையங்கார் உரை - குருளை விளையாட்டில் முட்டையுள் குஞ்சுக்கு இடர் செய்வது போலத் தன் வினோதத்து நீளுதலான் வரையாது நம்மை இடர் செய்பவன் என்பதாம். உள்ளுறை - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மனையகத்து வைக்கப்படாமையின் மறைவிடத்திராத மயிலின் முட்டையை ஈனும் பொழுது உளதாம் துயரத்தை அறியாத முசுக்குருளை ஈன்ற மயிலின் வருத்தத்தையும் எடுத்த முட்டையின் மென்மையையும் எண்ணாது உருட்டுகிறாற்போல காதலர் கருத்தில் வைக்கப்படாத எனது காமத்தை நீ உற்று உணராமையான் என் வருத்தத்தையையும் காமத்தையும் மென்மையையும் கருதாது நீ இவ்வாறு உரைக்கின்றனை என்பதாம். நன்று மன் (4) - உ. வே. சாமிநாதையர் உரை - மிக நல்லது, நன்று பெரிதுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - நன்று பெரியது, மன் கழிவின்கண் வந்தது. நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45). மன் - கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4). வல்லுவோர்க்கே (6) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - உகரம் சாரியை, ஈற்று மிசை ஆ ஓ ஆயிற்று.

சொற்பொருள்:

கான மஞ்ஞை - காட்டு மயில்கள், அறை ஈன் - பாறையில் ஈன்ற, முட்டை - முட்டைகளை, வெயிலாடு - வெயிலில் விளையாடும், முசுவின் குருளை - கருங்குரங்கின் குட்டி, உருட்டும் - உருட்டும், குன்ற நாடன் - மலை நாடனின், கேண்மை என்றும் - நட்பு என்றும், நன்று மன் - மிகவும் நல்லது (மன் மிகுதியை உணர்த்தியது), வாழி - அசை நிலை, தோழி - தோழி, உண்கண் - மை உண்ட கண்கள், நீரொடு - நீருடன், ஒராங்கு - ஒரு படியாக உள்ளது, தணப்ப - அவன் பிரிய, உள்ளாது - நினைக்காது, ஆற்றல் - (இருக்கும்) ஆற்றல், வல்லுவோர்க்கே - வலிமை உடையர்வளுக்கு மட்டும் தான் இருக்கும் (எனக்கு அது இல்லை)