குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 305

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

இற்செறிக்கப்பட்டுக் காப்புமிகுதியால் வருந்திய தலைவி, “என்காமநோய் நீங்குதற்கு உரியன செய்யுந் துணையைப் பெற்றிலேன்” என்று தானே கூறுமுகத்தால் அறத்தொடு நிற்றல் வேண்டுமென்பதைத் தோழிக்குப் புலப்படுத்தியது.

கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் . . . . [05]

குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை - யான் உற்ற நோயே.
- குப்பைக்கோழியார்.

பொருளுரை:

தலைவரைக்கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளியதீ என்பைப் பொருந்தும்படி வருத்தினும் அவர்பால் விரும்பிப்போய் அளவளாவுதற்கு நாம்! முன்பு நம்மை அவர் கண்ட இடத்திற் காணுதல் அரியேமாயினேம்; அவர்! நாமிருக்கும் இடத்திற்கு வந்து துன்பத்தை நீக்குதல் செய்தாரல்லர; இந்த நிலையில் யான் அடைந்த இக்காமநோய் பிறர் செலுத்தி விடார் இடையிலே சென்று பிரியச் செய்து நீக்காராக குப்பைக் கோழிகளின் தனிமையையுடைய சண்டையைப் போல தானே அழியும் வழி அழிந்தாலன்றி இதனை நீக்குவார் இல்லை.

முடிபு:

காம ஒள்ளெரி நலியினும் சென்று முயங்கற்கு அருங்காட்சியம்; அவர் வந்து களைதலை ஆற்றலர்; யான் உற்ற நோய்போர்போல விளிவாங்கு விளியினல்லது, களைவோர் இல்லை.

கருத்து:

என் துன்பத்தை நீக்கும் துணையாவாரைப் பெற்றிலேன்.