குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 338

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன் வந்தான்” என்று துணிவு பற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.

திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் . . . . [05]

வந்தன்று, பெருவிறற் தேரே - பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலம் கேழ்
அரிவை புலம்பு அசாவிடவே.
- பெருங்குன்றூர்கிழார்.

பொருளுரை:

மூங்கிலைப் போன்ற தோள்களையும் விளங்கிய இல்லின் கண்ணே அடங்கிய கற்பையுமுடைய அழகு பொருந்திய தலைவி தனிமையால் உண்டான துன்பம் நீங்கும் வண்ணம் மிக்க வெற்றியையுடைய தலைவனது தேர் முறுக்கின கொம்பையுடைய இரலையாகிய தலைமையையுடைய நல்ல ஆண்மான் மென்மையையும் மடப்பத்தையுமுடைய பெண்மானோடு தாம் தங்குதற்குரிய நிழலினிடத்தே தங்கி மலர்கள் நெருங்கிய அகன்ற பிணக்கத்தையுடைய தூற்றினிடத்தே தூங்கி பொழுது போனமையின் செழுவிய பயற்றம்பயிரைக் கறித்துத் தின்னும் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தினையும் பின் பனியையுமுடைய கடையாமத்தையும் குளிர்ந்த பனியையுமுடைய அச்சிரக் காலத்தில் வந்தது.

முடிபு:

அரிவை, புலம்பு அசாவிடப் பெருவிறல் தேர் வந்தன்று.

கருத்து:

தலைவன் மீண்டு விரைவில் வருவான்.