குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 184

நெய்தல் - தலைவன் கூற்று


நெய்தல் - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தன்னை இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை . . . . [05]

நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப்படூஉம் கானலானே.
- ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்.

பொருளுரை:

மயிலின் பீலிக் கண்ணைப் போன்ற மாட்சிமைபொருந்திய கூந்தலையுடைய, பொம்மையைப் போன்ற, நுண்ணிய வலை பரதவரின் இள மகளின் கண் வலையில் அங்குச் செல்பவர்கள் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையில், என்னுடைய மாண்பு மிக்க நெஞ்சம் இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது என்று ஆராயாது, அகப்பட்டு அவ்விடத்தில் தங்கிவிட்டது. தாம் கண்டதை மறைத்துப் பொய் சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை. நான் கூறுவதை உண்மையாகக் கொள்ளுங்கள். அவளுடைய சிற்றூருக்குச் செல்வதைத் தவிருங்கள்.

குறிப்பு:

செலவே - ஏகாரம் அசை நிலை, ஒழிந்தன்றே - ஏகாரம் அசை நிலை, கானலானே - ஏகாரம் அசை நிலை, ஓம்புமின் (மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி). பொ. வே. சோமசுந்தரனார் உரை - மாண்தகை நெஞ்சம் என்றான், அவளைக் காணுமுன்பெல்லாம் ‘தக்க இன்ன தகாதன இன்ன’ என்று ஆராயும் மாண்புடைய நெஞ்சமே யானும் உடையேன். நுண் வலை (6) - உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - நுண்ணிய நூலாயான வலை.

சொற்பொருள்:

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை - தாம் கண்டதை மறைத்துப் பொய் சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை, குறுகல் - அருகில் செல்லுதல், ஓம்புமின் - பாதுகாத்துக் கொள்ளுங்கள், சிறுகுடிச் செலவே - சிற்றூருக்குச் செல்லுதல், இதற்கிது மாண்டது - இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது, என்னாது - ஆராயாது, அதன் பட்டு - அந்த வலையில் பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே - அவ்விடத்தில் தங்கியது, மாண் தகை நெஞ்சம் - என்னுடைய மாட்சிமையையுடைய நெஞ்சம், மயில் கண் அன்ன - மயிலின் தோகையில் உள்ள கண்ணைப் போல, மாண் முடிப் பாவை - மாட்சிமையுடைய முடியையுடைய பாவை போல்வாளாகிய பெண், மாட்சிமையுடைய முடியையுடைய பொம்மையைப் போன்ற பெண் (பாவை - பொம்மை, சிலை), நுண் வலை - நுண்ணிய வலை, பரதவர் மடமகள் - பரதவரின் இளமகள், கண் வலைப்படூஉம் - கண் வலையில் அகப்படுகின்ற (வலைப்படூஉம் - இன்னிசை அளபெடை), கானலானே - கடற்கரைச் சோலையில்