குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 268

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தே இருப்ப, இரவுக் குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு அஞ்சுதலையும், தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் தோழி தலைவிக்குக் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது.

'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ?' என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்? - தோழி! - பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து, . . . . [05]

நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
- கருவூர்ச் சேரமான் சாத்தனார்.

பொருளுரை:

தோழி! பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை துணிக்கும் இடியொடு கூடிய பாதியிரவு என்று எண்ணாராகி ஈண்டுப் போந்து. நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை அடைந்த தலைவர் பால் செல்கின்றீரோ என்று செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்; சென்றால் மீண்டும் வருவிரோ என்று கேட்டலையும் செய்யோம; எவ்வாறு செய்வேம்!

முடிபு:

தோழி, வந்து அடைந்திசினோர்பால், சேறிரோவெனச் செப்பலு மாற்றாம்; வினவாம்; யாங்குச் செய்வாம்!

கருத்து:

தலைவர் வரைந்து கொள்ளுதலே நலம்.